Festivities inOur Temple

ருத்ர ஜபம்

ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா.ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ருத்ரஜபம் அபிஷேகம் நடைபெறும்.

ஜாபால உபநிடதம் என்பது சுக்ல யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.இதில் மூன்றாவது காண்டத்தில். ருத்ரஜபத்தின் பெருமை விவரிக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரம் ருத்ரோபநிடதம் என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. ஐந்தெழுத்து மந்திரமான சிவ பஞ்சாக்ஷரீ மந்திரம் இதனில் உள்ளது. 101 யஜுர்வேத சாகைகளிலும் இன்னும் பல வேத சாகைகளிலும் இது காணப்படுவதாலும், நூற்றுக் கணக்கான வடிவங்களில் ருத்ரன் இங்கு போற்றப்படுவதாலும் ஸ்ரீருத்ரத்திற்கு சதருத்ரீயம் என்னும் பெயரும் உண்டு. ('சத' என்னும் வடமொழிச் சொல்லுக்கு நூறு என்று பொருள்). சதருத்ரீயத்தை ஜபித்தால் ஒருவன் சாகாநிலை என்னும் வீடு பெறுவான் என்பதை இக்கண்டத்தில் யாக்ஞவல்கிய முனி அவருடைய சீடர்களுக்கு உபதேசிக்கிறார்.

சிவனிடம் இருந்து படைப்புத்தொழிலை பெற்ற பிரம்மா, ஒரு கோடி உயிர்களை படைத்தார். ஆனால் அவர்களுக்கு அழிவு உண்டாகவில்லை. எனவே, பிரம்மா சிவனிடம் வேண்டினார். சிவன் அவரிடம், தான் தவத்தில் இருந்தபோது பிறந்ததால் அவர்களுக்கு அழிவில்லை என்றும், தன் பெயராலேயே அவர்கள் “ருத்ரர்கள்’ என அழைக்கப்படுவர் என்றார். மேலும் அவர்களுக்கு படைப்புத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் பணியையும் கொடுத்தார். மகிழ்ந்த ருத்ரர்கள் யாகம் நடத்தி சிவனை வணங்கினர். சிவ அம்சமான ருத்ரர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களை சொல்லி வணங்கி செய்த பூஜையே, “ருத்ரஜபம்’ ஆகும்.

சகஸ்ரநாம அர்ச்சனை

நாமம் என்றால் பெயர்.கலியுக வரதன் கண் கண்ட தெய்வம் ஸ்ரீ சுவாமி ஐயப்பனுக்கு ஆயிரம் ஐயப்ப நாமங்களை கொண்டு உலக நன்மைக்காக தினந்தோறும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும்.

உத்திர நட்சத்திர பூஜை

கார்த்திகை மாதம் உத்தர நட்சத்திரத்தில் ஸ்ரீ சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

Festivities inSabarimala Temple

Month Pooja Opening date Closing date
Makara Vilakku Mahotsavam 30-12-2015 20-01-2016
January 2016 Makara Vilakku 15-01-2016
February Monthly Pooja (Kumbham) 13-02-2016 18-02-2016
March Monthly Pooja (Meenam) 13-03-2016 18-03-2016
Utsavam 13-03-2016 23-03-2016
Kodiyetram 14-03-2016
Utsavam Aarattu - Painkuni Uthram 23-03-2016
April Vishu Mahotsavam (Medam) 10-04-2016 18-04-2016
Vishu Darsanam 14-04-2016
May Monthly Pooja (Edavam) 14-05-2016 19-05-2016
June Prathistha Dinam / Idol Installation Day 13-06-2016 14-06-2016
Monthly Pooja (Midhunam) 14-06-2016 19-06-2016
July Monthly Pooja (Karkitakam) 15-07-2016 20-07-2016
August Monthly Pooja (Chingam) 16-08-2016 21-08-2016
September Onam (14-09-2016) 12-09-2016 16-09-2016
Monthly Pooja (Kanni) 16-09-2016 21-09-2016
October Monthly Pooja (Thulam) 16-10-2016 21-10-2016
Sree Chithira Thirunal Aatta Vishesham 29-10-2016 30-10-2016
November Mandala Pooja Mahotsavam 15-11-2016 26-12-2016
December Mandala Pooja 26-12-2016
Makara Vilakku Mahotsavam 30-12-2016 20-01-2017
January 2017 Makara Vilakku 14-01-2017

We invite all Lord Ayyappa devotees around the globe for your generous contributions towards fulfilling the dream of the Lord Ayyappa Temple building at Parupoorani,karaikudi.

Donate Now
contact swamy aiyappan sangam

ContactUs

Inquiry Form

Find us

Swamy Aiyappan Sangam

Muthupattinam 3rd street,

Parupoorani,

Karaikudi,

Sivagangai Dist.

+91 99432 81053
swamyaiyappansangam@gmail.com