குருஜி ஐயப்பாசெல்வராஜ்

swamy aiyappan sangam

ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா.குருஜி ஐயப்பா செல்வராஜ் அவர்கள் ஆன்மீகம் மற்றும் மக்கள் தொண்டுமே தன் இருகண்களாய் கொண்டு அய்யன் ஐயப்பன் பூரண சரணாகதியே வாழ்வாய் வாழ்ந்துவருபவர்.

பொது வாழ்வில் அரைநூற்றாண்டாய் சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு மக்களுக்காய் தொண்டு செய்யும் குருஜி ஐயப்பா செல்வராஜ் அவர்கள் எவரொருவர் உள்ளத் தூய்மையும், எண்ணத் தூய்மையும் கொண்டு கலியுகவரதன் ஐயப்பனை தன் மனக்கோவிலில் பூஜிக்கின்றரோ அவர்தம் வாழ்வில் அய்யன் அருள் என்றும் நிறைந்திருக்கும் எனக் கூறுவார்.

குருஜி ஐயப்பா செல்வராஜ் அவர்கள் காரைக்குடி நகரில் பாரம்பரியம் மிக்க மண் மனம் மாறாத வகையில் ஒரு பாத்திரப் பட்டறை நடத்தி வருகிறார்.அனைத்தும் வணிகமயமான இக்கலியுகத்தில் ஆன்மீகத்தையும் வணிகமயமாக்கி வாழ்ந்துவருபவர்கள் மத்தியில் தான் ஈட்டும் பொருள் அனைத்தையும் தர்ம காரியங்களுக்காகவே பயன்படுத்தும் பண்பாளர்.

குருஜி ஐயப்பா செல்வராஜ் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம், ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உதவித்தொகை, பள்ளி கட்டட உதவித்தொகை என பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.

குருஜி ஐயப்பா செல்வராஜ் அவர்கள் உலக மக்களின் நல்வாழ்விற்காக கலியுக வரதன் அய்யன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி சித்தத்தால் காரைக்குடி பருப்பூரணி அருகில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் நிர்மாண வேலைகள் நடைபெற்று வருகிறது அதன் பொருட்டு ஆன்மீக மெய்யன்பர்கள் மற்றும் மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடைகளை தாராளமாய் அளித்து அய்யன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி அருள் பெற வேண்டுகிறோம். ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா.

contact swamy aiyappan sangam

ContactUs

Inquiry Form

Find us

Swamy Aiyappan Sangam

Muthupattinam 3rd street,

Parupoorani,

Karaikudi,

Sivagangai Dist.

+91 99432 81053
swamyaiyappansangam@gmail.com